பா.ஜ.க.வுக்கு விளம்பரம் பண்ணல - இச்சாஸ் திறப்பு விழாவில் பார்த்திபன்
- விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசினார்.
- நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குத்துவிளக்கை ஏற்றினார்.
சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் குத்துவிளக்கை ஏற்றினார்.
உணவக துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய உணவு வகைகளை கொண்டு வயிற்று பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.
இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்து பேசிய நடிகர், இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன், "நான் உள்ள வரும் போது பார்த்திபனாக இருந்தேன். என்னை செல்வமணியாக மாற்றி தலை முழுக்க ரோஜாக்களாகிவிட்டது. அவர் தான் ரோஜாவை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்.
இவர்கள் கொடுத்த காஃபியில் வடிவமைப்பு இடம்பெற்று இருந்தது. இப்போ எல்லாம் காஃபியில் தாமரை பூ போன்ற டிசைன் செய்வது வழக்கமாக இருக்கிறது. இதற்காக நான் பா.ஜ.க.-வுக்கு விளம்பரம் பண்றேன்னு எடுத்துக்காதீங்க. மக்கள் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கின்றனர்" என தெரிவித்தார்.