இயக்குநருக்கு கதைப்பிடிப்பும் கதாநாயகிக்கு சதைப்பிடிப்பும் தேவை - பேரரசுவின் சர்ச்சை பேச்சு
- இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார்.
- அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.
முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்த்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.
இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன். கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.
சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.
இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்" என்று பேசினார்.