சினிமா செய்திகள்

சம்பாதிச்ச பணம் எல்லாமே காலி.. நடுத்தெருவுல நின்னப்ப தான் "மெய்யழகன்" வாய்ப்பு வந்தது - 96 இயக்குநர் பிரேம்குமார்

Published On 2024-09-13 12:23 GMT   |   Update On 2024-09-13 12:23 GMT
  • 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.
  • இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

சமீபத்தில் நடைப்பெற்ற நேர்காணலில் இயக்குனர் பிரேம் குமார் அவரது வாழ்க்கையில் நடைப்பெற்ற சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துக்கொண்டார். அதில் அவர் " மெய்யழகன் படத்தின் கதையை எழுதி முடித்த நேரத்தில் 96 படத்தில் நான் சம்பாதித்த பணம் அனைத்தும் தீர்ந்துப் போனது. அப்பொழுது லயோலா கல்லூரியில் ஒரு செமினார் வகுப்பு நடத்த என்னை அழைத்தார்கள். நானும் சென்றேன் வகுப்புகளை நடத்தினேன். அதை முடித்து விட்டு காரில் வெளிவரும் பொழுது காரில் டீசல் தீரும் நிலையில் இருப்பதை நான் கவனித்தேன். இந்த லயோலா கல்லூரியை விட்டு வெளியே சென்றபின் கார் நின்றால் பரவாயில்லை என்ற நினைப்பில் இருந்தேன். அப்பொழுது லயோலா கல்லூரி மாணவன் ஒருவன் வந்து நான் எடுத்த செமினாருக்காக கல்லூரி சார்பாக மெமண்டோ பரிசைக் கொடுத்தான். நான் அதை சிறிய பரிசாக எண்ணி அதை கார் சீட்டில் வைத்தேன்.

அப்பொழுது தான் அந்த கவரில் நான் வந்ததற்கான கன்வீனியன்ஸ் ஃபீஸ் அதில் இருந்தது. அந்த பணத்தை வைத்துதான் நான் என் காருக்கு டீசல் போட்டு வீட்டிற்கு சென்றேன். அதற்கு அடுத்தநாள் கார்த்தி சார் எனக்கு கால் செய்து உங்களிடம் எதோ கதை இருக்காமே , என்னை சந்திப்பதற்கு யோசித்துக் கொண்டு இருப்பதுப்போல் கேள்விப்பட்டேன். " என்று மெய்யழகன் படம் கமிட் ஆவதற்கு முன் இருந்த சூழலை மிகவும் எமோஷ்னலாக  கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News