சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. அமைச்சர் உதயநிதிக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து
- தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர்கள் அனிருத் , ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து.
சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதிக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை கொண்டுவந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலிக்கு வாழ்த்துக்கள். ஃபார்முலா 4 விளையாட்டு துறையின் மிகப்பெரிய முன்முயற்சியாக இருக்கும்" என்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு த்ரில்லிங் ரைடாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில், "சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முயற்சியால், இந்தியாவில் முதல் முறையாக, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னையின் புதிய வரலாறாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைய போகிறது. இந்த ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.