சினிமா செய்திகள்

சர்ச்சையைக் கிளப்பும் 'ஹமாரே பாராஹ்' - கர்நாடக அரசு அதிரடி தடை.. அப்படி என்னதான் இருக்கு?

Published On 2024-06-07 07:58 GMT   |   Update On 2024-06-07 07:58 GMT
  • இது இஸ்லாமிய சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் பிரச்சாரப் படமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
  • இந்த படத்தின்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

Full Viewஹிந்தியில் அணு கபூர், மனோஜ் ஜோஷி, அஸ்வினி காலேக்கர் ஆகியோர் நடிப்பில் கமல் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹமாரே பாராஹ் (Hamare Baarah). ஆரம்பம் முதலே கடும் சர்ச்சைகளுக்கு உள்ளான இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தனது தாயின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி வழங்குமாறு தந்தையை எதிர்த்து நீதிமன்றத்தில் மகள் வழக்கு தொடுகிறாள். இதை அடியொற்றி நகரும் கதை சர்ச்சையாவதற்கு முக்கிய காரணம், இது இஸ்லாமிய சமூக மக்களை தவறாக சித்தரிக்கும் பிரச்சாரப் படமாக உள்ளது என்ற குற்றச்சாட்டே ஆகும்.

 

மேலதிக பிரச்சார தொனியில் படத்தின் கதை நகர்வது மக்களிடையே விரோதத்தை உருவாக்கி சமூக மோதல்களை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவித்துவருகின்றனர். இந்த படத்தின்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தின் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் படத்தின் டிரைலர் சொல்லப் புகும் கருத்தை ஆராய்ந்தும், இந்த படம் சமூகங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதால் கர்நாடாக சினிமா ஒழுங்குமுறை சட்டம் 1964இன் படி 'ஹமாரே பாராஹ்' படத்தை திரையிட முதற்கட்டமாக 2 வாரங்களுக்கு தடைவிதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full View

முன்னதாக 'காஸ்மீர் பைல்ஸ்', 'கேரளா ஸ்டோரி', 'பஸ்தர்-நக்சல் ஸ்டோரி' உள்ளிட்ட படங்களும் வரலாற்றைத் திரிக்கும் பிரச்சாரப் படங்கள் என்ற விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. 

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News