வெப் சீரிஸ்-க்கு ரூ. 70 கோடி சம்பளம் பெற்ற பிரபலம் - யார் தெரியுமா?
- வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.
- 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர், ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார் என்ற இணைய தொடர் மூலம் ஓ.டி.டி. தளத்திற்கு அறிமுகமானார். இவர் இயக்கத்தில் உருவான "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" சீரிசில் சோனாக்ஷி சின்கா, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சீகல், ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக், அதித்தி ராவ் ஹைதாரி மற்றும் பலர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றிய கதையம்சம் கொண்ட தொடராக ஹீரமண்டி உருவாகி இருக்கிறது. விலை உயர்ந்த நகைகளில் துவங்கி, ஆடம்பர செட் என இந்த வெப் சீரிஸ் மிகவும் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில், ஹீரமண்டி வெப் சீரிசில் பிரபலங்கள் வாங்கிய சம்பலம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஹீரமண்டி வெப் சீரிசில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஹீரமண்டி வெப் சீரிஸ் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 60 இல் இருந்து ரூ. 70 கோடி வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சோனாக்ஷி சின்காவுக்கு ரூ. 2 கோடியும், மனிஷா கொய்ராலா மற்றும் ரிச்சா சத்தா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடியும், அதித்தி ராவுக்கு ரூ. 1.5 கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதே போன்று சஞ்சிதா ஷேக் ரூ. 40 லட்சமும், ஷார்மின் சீகல் ரூ. 30 லட்சமும், வாலி முகமது ரூ. 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.