சினிமா செய்திகள்

நான் குற்றமற்றவன் என்பதை சட்ட நடவடிக்கைகள் மூலம் நிரூபிப்பேன்-ஜெயசூர்யா

Published On 2024-09-01 05:50 GMT   |   Update On 2024-09-01 05:50 GMT
  • உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
  • நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

புதுடெல்லி:

மலையாள திரையுலகில் எழுந்துள்ள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து புகார் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா மற்றும் தயாரிப்பாளர் ரஞ்சித், பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் நடிகர் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயசூர்யா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.

தமிழ் சினிமாவில் என் மன வானில், மனதோடு மழைக்காலம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சக்கரவியூகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் மீது நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னிடம் நடிகர் ஜெயசூர்யா அத்துமீறயதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை அளித்த புகார் மீது ஜெயசூர்யா மீது 2-வது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெயசூர்யா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஒரு பொய் எப்போதும் உண்மையைவிட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்.

என் மீதான புகார்களை சட்ட ரீதியாக தொடர முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வக்கீல்கள் குழு கவனித்து கொள்ளும்.

மனசாட்சி இல்லாத எவரும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. துன்புறுத்தலை போல, துன்புறுத்தப்படுதலும் வேதனையானது.

நமது நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்ற பங்களித்தவர்களுக்கு நன்றி.

இவ்வாறு ஜெயசூர்யா தனது பதிவில் கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News