சினிமா செய்திகள்
null

ரஜினி படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ்?

Published On 2024-05-17 13:48 GMT   |   Update On 2024-05-18 11:05 GMT
  • ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
  • படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பி.டி.சார். படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக காஷ்மிரா மற்றும் அனிகா சுரேந்திரன், பிரனதி, பிரபு, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், முனீஸ் காந்த், மதுவந்தி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வரும் 24-ந் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . இதையொட்டி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

எங்கள் நிறுவனத்தில் இந்தப் படத்தை தயாரித்தது திருப்திகரமாக உள்ளது. இந்த கதையை ஆதி என்னிடம் கூறியவுடன் உடனே தயாரிக்க சம்மதம் சொன்னேன். இப்பொழுது படத்தை பார்க்கும் பொழுது முழு திருப்தி ஏற்படுகிறது.

இந்த படத்தில் வருவது போல பி.டி. சாருக்கும், இங்கிலீஷ் டீச்சருக்கும் காதல் என்பது பல இடங்களில் நடந்து கொண்டிருப்பது தான்.என்னுடைய பள்ளி பருவ காலத்திலும் பிடி சாரும் இங்கிலீஷ் டீச்சரும் காதலித்தனர். அவர்கள் காதலை சேர்த்து வைத்து திருமணத்தையே நான் தான் செய்து வைத்தேன். அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நல்ல செய்தி இருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐசரி கணேஷ்,  ரஜினிகாந்த் நடிக்கும் 172-வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டதற்கு, இது தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்தது உண்மை. அவரிடம் பேசி உள்ளோம் விரைவில் நல்ல செய்தி வெளியாகும், இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News