சினிமா செய்திகள்
null

'கல்கி 2898 ஏடி' இவங்களுக்கெல்லாம் புரியாது.. மகாபாரதத்தையே மாத்திட்டாங்க - சக்திமான் நடிகர் சர்ச்சை

Published On 2024-07-05 03:28 GMT   |   Update On 2024-07-05 03:28 GMT
  • மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும்.
  • படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார்.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வருகிறது. எட்டே நாட்களில் 700 கோடியைத் தாண்டி வசூல்  வேட்டை நடத்தி வருகிறது.

நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர் பட்டாலமே நடித்துள்ளது. பேன்டஸி பிக்சனாக உருவாகியுள்ள இப்படத்தின் கதை மகாபாரதம், கிருஷ்ணர், கலியுகம், கல்கியின் பிறப்பு ஆகியவற்றை சுற்றி நிகழ்கிறது.

இந்நிலையில் ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வரும் வேளையில் 90 ஸில் பிரபல தொடரான சக்திமான் தொடரின் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணா கல்கி 2898 ஏடி படம் குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

 

கல்கி 2898 ஏடி குறித்து அவர் கூறியதாவது, இந்த படம் மேற்கத்திய ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அளவுக்கு மிகவும் அதிபுத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கே இதுபோன்ற கதைகள் புரியும். ஒடிசா, பீகார் மாநிலங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் இது புரியாது.

அதுமட்டுமின்றி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதக் கதைகளை படத்தில் திரித்துக் கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணர், அஸ்வத்தாமாவின் நெற்றியில் உள்ள கல்லை சாபம் காரணமாக நீக்குவார். ஆனால் படத்தில் வேறு மாதிரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க் க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News