கருணாநிதி நூற்றாண்டு விழா: ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு ரத்து
- மழை வெள்ளம் காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி நடைபெறும் 'கலைஞர் - 100' என்ற விழா, வருகிற 24-ந்தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மழை வெள்ளம் காரணமாக இந்த விழா, ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ந்தேதிகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 6-ந்தேதி விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது
மேலும் ஜனவரி 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டாய அவசியம் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.