குபேரா திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் அறிவிப்பு
- தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் குபேரா.
- இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள்ளார். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசர் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.