சர்ச்சையில் சிக்கிய மாதுரி தீட்சித்
- கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.
- டெக்சாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது.
ஒரு கம்பெனிக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தமான பிரபல பாலிவுட் சீனியர் நடிகை மாதுரி தீட்சித் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஆகஸ்டு மாதத்தில் தனது கம்பெனிகளின் விளம்பரத்திற்காக டெக்சாசில் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.
இந்த கம்பெனியின் விளம்பரதாரரான மாதுரி தீட்சித் டெக்சாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளார்.
ஆனால் அந்த தொழில் அதிபர் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு வைத்து இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்திய அரசாங்கம் அவர் நடத்தும் நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைத்தது.
அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாதுரி தீட்சித் மீது சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.
பாகிஸ்தான் தொழில் அதிபரின் பின்புலம் என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே அந்த நிறுவனத்திற்கு விளம்பரதாரராக எப்படி நீங்கள் இருக்கலாம். டெக்சாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.