null
மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி- போலீஸ் அறிக்கையில் தகவல்
- ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
- கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை தாக்கல்.
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
படத் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோரின் முன் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
படப்பிடிப்பு துவங்கும் முன்பே, படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக ஹமீதுவிடம் பணம் பெற்று, 18.65 கோடி செலவான நிலையில் 22 கோடி செலவானதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.