சினிமா செய்திகள்

இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள் - இயக்குநர் பேரரசு

Published On 2024-05-17 15:21 GMT   |   Update On 2024-05-17 15:21 GMT
  • பகலறியான் படத்தின் கதையை கிஷோர்குமார் எழுதியுள்ளார்.
  • நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் படத்தில் நடித்த வெற்றி நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் "பகலறியான்". இது சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

மே 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட இயக்குநர் பேரரசு பேசும் போது, "பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள்."

"சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார்," என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலக்கதையை கிஷோர்குமார் எழுதியுள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News