சினிமா செய்திகள்
null

மாரி செல்வராஜ் இயக்கும் 5-வது படம்

Published On 2024-03-12 09:45 GMT   |   Update On 2024-03-12 10:37 GMT
  • உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ்.
  • கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் படத்தை இயக்கியனார் மாரி செல்வராஜ். 2018-ஆம் ஆண்டில் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் எடுத்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். மக்களிடையே மிகுந்த பாராட்டை இப்படம் குவித்தது.

பெரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியையடுத்து, 2021-ல் தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். அடுத்ததாக 'வாழை' என்ற படத்தை இயக்கினார். அப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் மாரி செல்வராஜ் அவரின் 5-வது படத்தை இயக்கவுள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் இதில் நடிக்கவுள்ளனர். பா. ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கபடி விளையாட்டு பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமையவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு வரும் மாதங்களில் ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

"எனது 5-வது படத்தை நான் இயக்கவுள்ளேன் . மீண்டும் பா.ரஞ்சித் அண்ணாவுடன் இணைந்து பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குநராக மாரி செல்வராஜ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News