வீடியோ கால் மூலம் நடந்த நெப்போலியன் மகன் நிச்சயதார்த்தம்
- தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
- நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரை உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நெப்போலியன். அரசியலில் ஈடுபட்டு மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.
நெப்போலியனுக்கு திருமணமாகி மனைவி ஜெயசுதா மற்றும் தனுஷ், குணால் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இயற்கை முறை சிகிச்சை பெற்றார்.
தனுசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அக்சயா என்பவருடன் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோகால் மூலம் நடந்தது.
நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருகிறார்.
திருமண விழாவில் திரை உலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.