null
புஷ்பா 2 ஓடிடி உரிமத்தை வாங்கிய நெட்ப்ளிக்ஸ் - எத்தனை கோடி தெரியுமா?
- கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா' படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது
- புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், 'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.
இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது.
இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புஷ்பா தி ரைஸ் படத்தின் வெற்றியை போலவே இந்தப் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
புஷ்பா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. இந்நிலையில், தற்போது புஷ்பா 2 அதை விட அதிக தொகைக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
புஷ்பா 2 படத்தின் இந்தி மொழி உரிமத்தை தயாரிப்பாளர் அனில் தடானி 200 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. எனவே இந்தியில் மட்டுமே 500 கோடிக்கு மேல் புஷ்பா 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் 275 கோடி ரூபாய் கொடுத்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கு முன்பு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே அதிக பட்சமாக 175 கோடிக்கு 3 ஓடிடி நிறுவனங்களிடம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.