மே 1 முதல் ராகவா லாரன்சின் மாற்றம்
- பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.
- ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. அதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ராகவா லாரன்ஸ்-க்கு இத்திரைப்படம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார். பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். சமீபத்தில் மாற்று திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் இல்லாத மக்களுக்கும் தேவையுள்ள மக்களுக்கும் சேவை செய்ய போகிறார். அதில் அவர் படிக்க வைத்த பல இளைஞர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய போகிறோம் என்ற கூறி ஒரு வீடியோவை வெளியிட்டனர் அதை ராகவா லார்ன்ஸ் அவரது எக்ஸ் பகக்த்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இந்த மாற்றம் அமைப்பில் சேர்ந்து தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும், மே 1 மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய கூறினாலும் நான் செய்வேன். ஃபார் மை பாய் சீசர் என்று ஜிகர்தண்டா படத்தின் வசனத்தையும் பேசி வீடியோவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.