கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்த ரஜினி
- தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.
- தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் ஆன்மீக பயணமாக இமைய மலைக்கு செல்வது வழக்கம்.
தற்பொழுது அவர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அடுத்து ரஜினிகாந்த் லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
கூலி படத்திற்கு முன் ஆன்மீக பயணத்தை மே 30 தொடங்கினார் ரஜினிகாந்த். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசும்போது " நான் கேதார்நாத், பத்ரிநாத், பாபா குகை வருடா வருடம் செல்வது வழக்கம், ஒவ்வொரு முறை நான் அங்கு செல்லும் போது எனக்கு அது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது என்று கூறினார். அதைத்தொடர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி வெற்றி பெறுவாரா என்ற கேட்ட கேள்விக்கு நோ கமண்ட்ஸ், அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அதை மறுத்துவிட்டார்.
நேற்று ரஜினிகாந்த கேதார்னாத் மற்றும் பத்ரினாத் கோவில்களில் வழிப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.