ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது கடினமாக இருக்கிறது: ரஜினிகாந்த் பேச்சு
- சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர்தான் நடித்திருக்க வேண்டும்.
- அமிதாப் டப்பிங் எல்லாம் செய்து படிப்படியாக கடின உழைப்பால் மிக பெரிய ஸ்டாராக உயர்ந்தார் என்றார்.
சென்னை:
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசியதாவது:
நமக்கு மெசேஜ் சொல்றது செட் ஆகாது... படம் கமர்ஷியலா இருக்கணும்.. மக்கள் கொண்டாடனும்.. அப்படின்னு இயக்குனர் ஞானவேலு கிட்ட சொன்னேன்..
சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப்பச்சன் கேரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இப்போதெல்லாம் நல்ல இயக்குநர்கள் கிடைப்பதில்லை. அந்த காலங்களில், கதை, திரைக்கதை வேறு ஒரு ஆள் எழுதுவார். இயக்கம் வேறு ஒரு ஆள் செய்வார். இப்போது எல்லாவற்றையும் ஒரே ஆள்தான் செய்ய வேண்டும். அது மிகவும் கடினமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே கடினமாக இருக்கிறது. இயக்குநர்கள் உடனான காம்பினேஷனும் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறது.
இந்த படத்தில் 100 சதவீதம் அனிருத் தான் வேண்டும் என்று இயக்குநர் என்னிடம் சொன்னார். அதற்கு உங்களுக்கு 100 சதவீதம் என்றால் எனக்கு 1000 சதவீதம் அவர்தான் வேண்டும் என்று சொன்னேன் என தெரிவித்தார்.