சினிமா செய்திகள்

இறந்துப்போன தந்தையுடன் பேசிய அனுபவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா

Published On 2024-07-01 02:17 GMT   |   Update On 2024-07-01 02:17 GMT
  • பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார்.
  • இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார்.

இந்தி சினிமாவில் சர்ச்சைக்குறிய இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா, அவர் பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ராட் ராத்ரி, பூத், ஃபூங்க் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

என்னதான் இயக்குனர் ஹாரர் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவர் வாழ்க்கையில் இம்மாதிரி அமானுஷ்ய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பாரா என்ற கேள்வி இருக்கும். அப்படி ஒரு சம்பவத்தை ஆர்.ஜி.வி சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணலில் இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார். அவர்கள் இருவரும் விமான பயணத்தின் போது சந்தித்ததாகவும், தனக்கு பின்னாடி இருக்கையில் தாவர் அமர்ந்திருந்தார். இதனால் ஆர்.ஜி.வி அவருடன் பேசலாம் என பின் இருக்கைக்கு சென்று பேசியுள்ளார். அப்போது தாவர் ஆர்ஜிவி ஐ பார்த்து `உங்க அப்பா இறந்துட்டாரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு 15 நாட்கள் முன் ஆர்ஜிவி இன் தந்தை இறந்ததால் இவர் ஆமா என்று பதிலளித்துள்ளார். பின் சிறிய அமைதிக்கு பின் தவார் " உங்க அப்பா இப்போ நம்ம கூட தான் இருக்காரு" என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ஆர்ஜிவி- க்கு பெரும் அதிர்ச்சி பின் "எனக்கு இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல" என்று கூறியுள்ளார்.

அதற்கு தாவர் " அவருக்கும் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல அவர் உன்னைய பற்றி ரொம்ப கவலை படுறாரு" என்று ஆர்ஜிவியின் தந்தை கூறியதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி, பயம், கோபம் என பல எமோஷன்களை மேற்கொண்ட ஆர்ஜிவி அந்த இருக்கையில் இருந்து எழுந்து பழைய இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். இவ்வாறு இந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்ஜிவி.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News