சென்னையில் விருது பெறுவது எனக்கு ஸ்பெஷல் - ஏ.ஆர் ரஹ்மான்
- இசை துறையில் மிக முக்கியமான நபராக இருப்பவர் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான்.
- ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஐஐடி மெட்ராஸ் பல்கலை கழகத்தில் புதுமைக்கான விருதை வழங்கியது.
இசை துறையில் மிக முக்கியமான நபராக இருப்பவர் இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான். இந்திய திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.
இந்தாண்டு வெளியான ஆடுஜீவிதம், மைதான், ராயன், அயலான் இவர் இசையமைத்த திரைப்படங்கள் மிகப்பெரியளவில் ஹிட்டானது.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஐஐடி மெட்ராஸ் பல்கலை கழகத்தில் புதுமைக்கான விருதை வழங்கியது. சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் லே மஸ்க் என்ற ஒரு விர்சுவல் ரியாலிட்டி திரில்லர் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை இயக்கியதற்காக இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.
இந்த விருதை பெற்ற அவர் " சென்னையில் விருது வாங்குவது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. விர்சுவல் ரியாலிட்டி திரைப்படத்தை இயக்கிய மற்றவர்கள் செய்த தவறை இப்படத்தில் செய்யக்கூடாது என தெளிவாக இருந்தோம். இப்படத்தை இயக்க எங்களுக்கு ஸ்பெஷலான கேமரா தேவைப்பட்டது. நான் ஒவ்வொரு முறை மைக்ரோசாஃப்ட் மற்றும் இண்டெல் போன்ற பிராண்டுகளை பயன்படுத்தும்பொழுது. ஏன் அனைத்து பிராண்டுகளும் வெளிநாட்டில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஏன் இந்தியாவில் இருந்து வருவதில்லை என?. இதை அரசு கவனிக்க வேண்டும்." என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்