சினிமா செய்திகள்

கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது- சாக்ஷி அகர்வால்

Published On 2023-12-29 12:42 GMT   |   Update On 2023-12-29 12:42 GMT
  • விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
  • நடிகை சாக்‌ஷி அகர்வால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை காலமானார்.

இன்று தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளுக்கு சென்ற திரை பிரபலங்கள் பலர் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாக்ஷி கூறியிருப்பதாவது:-

கேப்டன் விஜயகாந்த் சார்.. அவருக்கு இந்த நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல வருடங்கள் அவர் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் இறந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் ஓர் இளம் நாயகி.. என்னிடம் மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு. கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது.

படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் கதாநாயகன் வரை அனைவரையுமே சமமாக நடத்துவற்கு காரணமானவர் கேப்டன். இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என நம்புகிறோம்.

கேப்டனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News