சினிமா செய்திகள்

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை.. விசாரணை அறிக்கை கோரும் சமந்தா

Published On 2024-08-31 05:37 GMT   |   Update On 2024-08-31 07:22 GMT
  • கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார்.
  • இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்.

மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையை சமந்தா பாராட்டினார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "தெலுங்கு திரையுலகப் பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். கேரளாவில் வுமன் இன் கலக்ட்டிவ் சினிமா அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டுகிறோம். இதே போல் தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக வாய்ஸ் ஆஃப் வுமன் அமைப்பு 2019ல் உருவாக்கப்பட்டது.

கேரளாவை போல் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழல் அமையும்" என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News