சினிமா செய்திகள்
null

தமிழ் திரையுலகில் பாலியல் தொல்லை - பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On 2024-09-22 12:10 GMT   |   Update On 2024-09-22 13:03 GMT
  • ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி திரை உலகையே ஆட்டி படைத்து வருகிறது.
  • குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் பெண்கள் கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி திரை உலகையே ஆட்டி படைத்து வருகிறது. பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மலையாள திரை உலகைபோல் தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பாலியல் கொடுமை நடந்ததாக தகவல்கள் வெளியானது.

தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காண தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ரோகிணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:-

நான் திரை உலகில் 12 வருடங்களாக இருக்கிறேன். ஒரு நடிகையாக நான் கவனிக்க வேண்டிய முதல் பிரச்சினை என்னவென்றால் வெளிப்புற படப்பிடிப்பிற்கு செல்லும் போது சரியான கழிப்பறை வசதி மற்றும் எல்லா வசதிகளும் கொண்ட கேரவன் முன்னணி நடிகையான எனக்கு கிடைக்கும்.

ஆனால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் பெண்கள் கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாவில் இது போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

நான் திரையுலகில் பாலியல் பிரச்சினைகளை எதிர் கொண்டதில்லை. தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

பெண்கள் புகார் கொடுத்தால் அதனால் அவர்களுக்கு சினிமாவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.

அவர்களை பாதுகாக்க வேண்டும். யாராவது குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். திரை உலகில் உள்ள நடிகைகள் தைரியமாகவும் திறமையுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News