சினிமா செய்திகள்
null

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் - வெளியான அப்டேட்

Published On 2024-08-26 11:38 GMT   |   Update On 2024-08-26 12:07 GMT
  • 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
  • அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.

இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சண்முக பாண்டியன் கடைசியாக மதுர வீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார்.

இப்படத்தை ஸ்டர் சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவே.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News