ஆறுமாதங்கள் வரை டார்க் ரூமில் தங்கியிருந்தேன் - இயக்குநர் சிங்கம்புலி
- எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.
- சினிமா தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ நடராஜ் தயாரிப்பில் ஈ.கே. முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'பார்க்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, "நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது."
"இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்."
"சினிமா அவரைக் கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும், தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்," என்று தெரிவித்தார்.
இயக்குநர் முருகன் இயக்கி இருக்கும் பார்க் படத்திற்கு அமரா இசையமைக்க, பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.