சினிமா செய்திகள்

கேட்கும் திறனை இழந்த பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அல்கா யாக்னிக்

Published On 2024-06-18 13:25 GMT   |   Update On 2024-06-18 13:25 GMT
  • 25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
  • விமானத்தில் இருந்து வெளியேறும்போது தன்னால் எதையும் கேட்க முடியாததை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் அல்கா யாக்னிக். 58 வயதான இவர் பாலிவட் சினிமா உலகின் முன்னணி பாடகியாக திகழ்ந்தவர். 90-களில் இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். பிலிம்ஃபேர் விருது, சிறந்த பின்னணி பாடகிக்கான விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் அல்கா யாக்னிக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தற்போது அரிய வகை நோய் காரணமாக கேட்கும் திறனை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அல்கா யாக்னிக் வெளியிட்டுள்ள பதிவில், "சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து வெளியேறும்போது திடீரென என்னால் எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். இதனால் பொது நிகழ்ச்சியல் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இது தொடர்பாக கேட்க ஆரம்பித்தனர். சில நாட்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், பின்தொடர்பவர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் இதை வெளிப்படுத்துகிறேன்.

இது ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட ஒரு அரிய செவித்திறன் இழப்பு என கண்டறியப்பட்டுள்ளது. இந்த திடீர், பெரும் பின்னடைவு என்னை முற்றிலும் அறியாமல் பிடித்துவிட்டது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவிக்கவும், இதில் இருந்து மீண்டு வர தனக்கான பிரார்த்தனை செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.

Tags:    

Similar News