சினிமா செய்திகள்
null

காமெடியன்களை குறைத்து மதிப்பிடாதீங்க - சிவகார்த்திகேயன்

Published On 2024-05-21 09:12 GMT   |   Update On 2024-05-21 09:45 GMT
  • தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்.
  • கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்.

காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் கருடன். சூரி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "சீமராஜா படப்பிடிப்பின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் சூரி அண்ணனிடம் கதையின் நாயகனாக சில கதைகளை தேர்வு செய்து நடிக்க கூறினேன். ஆனால் அவர் தயங்கினார். பிறகு சிறிது காலம் கழித்து என்னை அழித்த சூரி, இயக்குநர் வெற்றிமாறன் தன்னை முதன்மை பாத்திரத்தில் வைத்து படம் இயக்க இருப்பதாக தெரிவித்தார்."

"அவர் கூறிவிட்டார், ஆனால் எனக்கு பதட்டமாக இருக்கிறது. அவர் இயக்கத்தில் நடிக்க சற்று தயக்கமாக இருப்பதாக தெரிவித்தார். அவருடன் முதல் படம் இருக்கட்டும், அடுத்து யார் இந்த மாதிரி படம் எடுப்பார்கள் என்று தயங்கினார். அவரிடம் கண்ணை மூடிக்கொண்டு அவர் சொல்லும் படி நடிக்க சொன்னேன்."

"காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களால் எமோஷன், சீரியஸ் வேடங்களில் எளிதாக நடித்துவிட முடியும். காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு இன்னொரு உதாரணம் சூரி அண்ணன். காமெடி நடிகர்களால் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவிட முடியும். ஆனால், சீரியஸ் கதாபாத்திரம் நடிப்பவர்களால் காமெடி வேடங்களில் நடித்துவிட முடியாது. அது மிகவும் கடினமானது," என்று தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News