முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
- கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார்.
- முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இரங்கல் செய்தியில் "முரசொலி பத்திரிகையில், சுமார் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணியாற்றி தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரவாக ஒலித்தவர் முரசொலி செல்வம். அவர்கள் முரசொலி நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராகவும் இருந்துக்கொண்டே திரைத்துறையில் இது எங்க நாடு, திருட்டு ராஜாக்கள், மாடி வீட்டு ஏழை, பாலைவன ராஜாக்கள், புயல்பாடும் பாட்டு பாடாத தேனீக்கள், பாசப்பறவைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர்.
மேலும் திரைத்துறையிலும் பத்திரிக்கைத்துறையிலும் சிறப்பான பங்களித்தவர். 84 வயதான முரசொலி செல்வம் அவர்கள், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருடைய மறைவால் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.