சினிமா செய்திகள்

என்னைப் போல் என் தம்பிக்கும் ஆதரவு கொடுங்கள் - எமோஷனலான அதர்வா முரளி

Published On 2024-06-29 15:33 GMT   |   Update On 2024-06-29 15:33 GMT
  • XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி,
  • ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.

நயன்தாரா, "'நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.

நடிகை அதிதி, "முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி".

அதர்வா முரளி, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News