சினிமா செய்திகள்
null

கேரளாவில் பிறந்தாலும், தமிழ்நாட்டை நேசிக்கிறேன்- சுரேஷ் கோபி

Published On 2024-07-04 02:52 GMT   |   Update On 2024-07-04 04:02 GMT
  • நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன்.
  • சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.

பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.

கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் நீட் குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்து கருத்து கேட்டபோது, அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News