சினிமா செய்திகள்

அஜித்

null

நியூ லுக்கில் நடிகர் அஜித்.. மீண்டும் தொடங்கிய பைக் பயணம்..?

Published On 2022-12-23 09:56 GMT   |   Update On 2022-12-23 09:59 GMT
  • நடிகர் அஜித் தற்போது 'துணிவு' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


அஜித்

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.


அஜித்

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தனது நண்பர்களுடன் உணவு உண்பது போன்றும் கப்பலில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News