சினிமா செய்திகள்

சரத்குமார்

150 வயது வரை யாராவது வாழ முடியுமா? -சரத்குமார் விளக்கம்

Published On 2023-05-30 15:16 GMT   |   Update On 2023-05-30 15:16 GMT
  • நடிகர் சரத்குமார் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் 50 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன் என்று கூறினார்.
  • அதனை 2026-ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்தது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.

தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரத்குமார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிகராக மட்டுமல்லாது சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.

சமீபத்தில், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026-ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசு பொருளானது.


சரத்குமார்

இந்நிலையில், 'போர் தொழில்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஒரு கூட்டத்தில் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இறுக்க நிலையை தளர்வுபடுத்த வேண்டும் என்பதற்காக காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகியுள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யாராவது 150 வயது வரை வாழ முடியுமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

ஒரு கட்சித் தொண்டர்களிடம், அவரது கட்சித் தலைவரை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் உள்ளது. இதை மறுக்க முடியாது. எதற்கு பொய் சொல்ல வேண்டும். நான் அதற்கு முயற்சிப்பேன். யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்" என்று கூறினார்

Tags:    

Similar News