சினிமா செய்திகள்

ஸ்ரீநாத் பாசி

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்கு ரத்து.. கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு..

Published On 2022-10-13 10:04 GMT   |   Update On 2022-10-13 10:04 GMT
  • தொகுப்பாளரிடம் அநாகரீகமாக பேசியதாக நடிகர் ஸ்ரீநாத் பாசியை காவல்துறை கைது செய்தது.
  • இவர் மீதான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'சட்டம்பி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.


ஸ்ரீநாத் பாசி

இதையடுத்து இவர் 'சட்டம்பி' திரைப்படம் தொடர்பாக பிரபலமான மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பெண் தொகுப்பாளரின் கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, தொகுப்பாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.


ஸ்ரீநாத் பாசி

இதுபற்றி கொச்சி, மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலீசார் கைது செய்து மூன்று மணி நேரம் விசாரணைக்கு பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.


ஸ்ரீநாத் பாசி

அதன்பின்னர், தன்னை நேரில் சந்தித்து நடிகர் ஸ்ரீநாத் பாசி மன்னிப்பு கேட்டதால் வழக்கை திரும்ப பெறுவதாக பெண் தொகுப்பாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீநாத் பாசி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இரு தரப்பினரும் இந்த வழக்கை சுமூகமாக தீர்த்துக் கொண்டதால் கேரள உயர்நீதிமன்றம் நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News