சினிமா செய்திகள்
ஆந்திராவில் கனக துர்க்கை அம்மன் கோவிலில் நடிகை ஹன்சிகா தரிசனம்
- நடிகை ஹன்சிகா 'மை நேம் இஸ் ஸ்ருதி' படத்தின் நடித்துள்ளார்.
- இவருக்கு வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள்.
ஆந்திர மாநிலம் என். டி.ஆர். மாவட்டம் விஜய வாடாவில் பிரசித்தி பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகை ஹன்சிகா நேற்று தரிசனம் செய்ய வந்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஹன்சிகா சாமி தரிசனம் செய்தார். வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள். கோவில் நிர்வாகிகள் ஹன்சிகாவுக்கு அம்மன் உருவப்படம், பிரசாதம் வழங்கினார்கள்.
வளையல் அலங்காரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. மை நேம் இஸ் ஸ்ருதி படம் எனது நடிப்பில் 17-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக விஜயவாடா வந்தோம். அனைத்து பார்வையாளர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.