null
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் விருப்பமில்லை.. நயன்தாரா குறித்த சர்ச்சைக்கு மாளவிகா மோகனன் விளக்கம்..
- நடிகை மாளவிகா மோகனன் தற்போது 'கிறிஸ்டி' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.
மாளவிகா மோகன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் மலையாளத்தில் அல்வின் ஹென்றி இயக்கத்தில் 'கிறிஸ்டி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன் லோடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "கதாநாயகர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது போல் நடிகைகளையும் பாலினம் குறிப்பிடாமல் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாமே, பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் ஆகியோரை லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடுவது இல்லையே. சூப்பர் ஸ்டார் என்று தானே சொல்கிறார்கள்" என்று கூறினார்.
கிறிஸ்டி
இது நடிகை நயன்தாராவை குறிப்பிடுவது போல் உள்ளது என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பெண் நடிகர்களை குறிப்பிட்டு சொல்லும் முறையை தான் தவறு என்று நான் பதிவிட்டேனே தவிர ஒரு குறிப்பிட்ட நடிகரை பற்றி நான் பேசவில்லை. உண்மையில் நான் நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன். ஒரு சீனியராக அவருடைய அற்புதமான இந்தப் பயணத்தை வியந்து பார்க்கிறேன். எனவே கொஞ்சம் அமைதியாக இருக்க முடியுமா" என்று பதிவிட்டுள்ளார்.