சினிமா செய்திகள்

விக்ரம்

null

இத்தனை வருடங்கள் அத்தனை கனவுகள் - நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி பதிவு

Published On 2022-10-17 12:31 GMT   |   Update On 2022-10-17 12:37 GMT
  • தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ என பல வித்யாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் விக்ரம்.
  • இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆகியுள்ளது.

1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தடம் பதித்தார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய சேது படத்தில் இவரின் நடிப்பு மூலம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க செய்தார். தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து இவரின் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்தார்.

 

பொன்னியின் செல்வன் - விக்ரம்

விக்ரம் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விக்ரம் பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அதில், நான் படங்களில் நடிப்பதற்கு முன்பு சோழா என்ற ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தேன். இப்பொழுது சோழ நாட்டின் இளவரசனாக நடித்திருக்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார். விக்ரம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 32 வருடங்களின் உழைப்பை சமூக வலைத்தளத்தில் பலரும் வெகுவாக பாராட்டினர்.

விக்ரம்

 

இந்நிலையில் விக்ரம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 32 வருடங்களை ரசிகர் ஒருவர் ஒரு சிறிய வீடியோ தொகுப்பாக உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்த விக்ரம், இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி. இந்த வீடியோவை தொகுத்த நபருக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News