null
ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசம்.. "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" தயாரிப்பாளர் அதிரடி
- பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் டிக்கெட்டுகளை அரசு பள்ளி மாணவரகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் இலவசமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர்கள், டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாகவும் அந்த டிக்கெட் விற்கப்படாது எனவும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தெலங்கானாவில் அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆதிபுருஷ் பட டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க உள்ளதாக "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். ராமரின் மீது கொண்ட பக்தியின் காரணமாக, 10 ஆயிரத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.