சினிமா செய்திகள்

சமுத்திரகனி

சரியான கதைகள் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அது தேர்ந்தெடுக்கும் - சமுத்திரகனி

Published On 2023-04-20 10:13 GMT   |   Update On 2023-04-20 10:13 GMT
  • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.
  • அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

அயோத்தி

இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் 50-வது நாள் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசியதாவது, ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு உயிரோடி இருக்கும் ஒரு திரைப்படம் கிடைத்திருக்கிறது. சில திரைப்படங்கள் ஒரு 100 வருடம் பேசப்படும். ஆனால், அயோத்தி திரைப்படம் திரையுலகம் இருக்கும் வரை பேசப்படும்.


அயோத்தி

நானும் சசிக்குமாரும் பார்க்கும் பொழுது அவர் ஒரு நான்கு கதையை கூறினார். அதில், அயோத்தி திரைப்பட கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சரியான கதைகள் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அது தேர்ந்தெடுக்கும். அப்படி தான் 'அயோத்தி' திரைப்பட கதையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. சசிகுமார் இந்த படத்தில் நடிக்கவே இல்லை. அவருடைய இயற்கையான குணமே அப்படிதான். சசிகுமாரின் மனதிற்கு ஏற்றவாறு ஒரு படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.

Tags:    

Similar News