சினிமா செய்திகள்
null

'என் உயிர் தோழன்' பாபுவின் தாயார் காலமானார்

Published On 2023-10-11 08:49 GMT   |   Update On 2023-10-12 01:20 GMT
  • 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்த நடிகர் பாபு கடந்த மாதம் காலமானார்.
  • இவரது உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'என் உயிர் தோழன்'. இந்த படத்தில் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவை கதாநாயகனாக்கி படத்தை வெற்றி படமாக மாற்றினார் பாரதிராஜா. அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முத்திரை பதித்தவர் பாபு.


அன்றிலிருந்து 'என் உயிர் தோழன்' பாபு என்ற பெயருடன் வலம் வந்த இவர் விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் கதாநாயகான நடித்தார். கடந்த 1991-ல் 'மனசார வாழ்த்துக்களேன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

இதில் நானே குதிக்கிறேன் என்று பாபு குதித்த போது டைமிங் மிஸ் ஆனதால், வேறு இடத்தில் விழுந்துள்ளார். இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்தார். இதையடுத்து கடந்த மாதம் நடிகர் பாபு காலமானார். இவரது உடலுக்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில், பாபுவின் தாயார் பிரேமா மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இவர் முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலமானார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேமா மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராஜாராமின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News