விக்னேஷ் சிவன் படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
- இவர் இயக்கவுள்ள படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படம் சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க அனிருத் இசையில் உருவாகும் எனவும் தன்னுடைய காதலுக்காக மொபைல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் இளைஞனை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.