சினிமா செய்திகள்

ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. பார்வையாளர்களை குவிக்கும் ஜெயிலர் பாடல்

Published On 2023-07-18 09:00 GMT   |   Update On 2023-07-18 09:01 GMT
  • ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
  • இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தது.


இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியான ஒரு நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.




Tags:    

Similar News