தனது மரணத்தை தானே தேடிக்கொண்ட கலாபவன் மணி- அதிர்ச்சியான ரசிகர்கள்
- மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
- அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது.
தமிழ், மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கலாபவன் மணி. ஜெமினி, மழை, பாபநாசம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி திடீரென மரணமடைந்தார்.அவரது மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களும் , சர்ச்சை களும் அப்போது எழுந்தது. 45 வயதில் மரணமடைந்த கலாபவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
எனவே அவரது மரணம் கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு கலாபவன் மரணம் பற்றி விசாரித்து வந்த சி.பி.ஐ. கேரள உயர் நீதிமன்றத்தில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. இதில் விசாரணை குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற போலீஸ் அதிகாரி சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி, கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. கல்லீரல் பாதித்து, ரத்தவாந்தி எடுத்த போதும், கட்டுபாடின்றி பீர் குடிப்பதை அவர் கைவிடவில்லை. மரணமடைந்த அன்று 12 பாட்டில் பீர் குடித்துள்ளார் என்றும் அதில் மெத்தல் ஆல்கஹால் கலந்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலாபவன் மணி இறப்புக்கு முதல் நாள் அவர் வீட்டுக்கு வந்து சென்ற நண்பர்கள் ஜாபர், இடுக்கி, தரிக்கிட காபு ஆகியோரிடம் இது குறித்து விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. கலாபவன்மணி தனது மரணத்தை தானே தேடிக்கொண்டார் என்று விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.