சினிமா செய்திகள்

மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.. இந்தியன் -2 அப்டேட் கொடுத்த கமல்..

Published On 2022-12-16 03:31 GMT   |   Update On 2022-12-16 03:31 GMT
  • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


இந்தியன் -2

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கமல்ஹாசன்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-௨ படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.



Tags:    

Similar News