null
'ராக்கெட்ரி' படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்.. மாதவன் நெகிழ்ச்சி..
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' ஓடிடி-யில் வெளியானது. இருந்தாலும் திரையரங்குகளில் இத்திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
நம்பி நாராயணன் குடும்பத்துடன்
இந்நிலையில் மாதவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஓடிடி-யில் ராக்கெட்ரியை பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு செல்லும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்." என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணனின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
To all the people going to the theaters to watch Rocketry after seeing it on OTT.. a big big hug 🤗🤗🤗🤗🤗🤗🤗🙏❤️❤️ and all the love and gratitude ❤️❤️❤️🙏🙏🚀🚀🚀🚀 pic.twitter.com/IUdCn6TjPk
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 3, 2022