உண்மைய மட்டும் பேசக்கூடாதுனு புரிஞ்சிக் கிட்டேன் - ஆர்.கே. செல்வமணி
- வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்று மாற்றினேன்.
- இது கற்பனை என்கின்ற ஒரு கார்டைப் போட்டேன்.
நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, "ஒரு விஷயத்தை சொல்கிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், வளைந்து போக கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி பயன்படுத்தினேன்."
"வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும், ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்து கொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே," என்று தெரிவித்தார்.