இசை பெரிதா? மொழி பெரிதா? வைரமுத்து விளக்கம்
- மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு.
- பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான்.
முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் 'படிக்காத பக்கங்கள்.' யாஷிகா ஆனந்த் முதன்மை தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜார்ஜ் மரியான் மற்றும் லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, "இந்தப் 'படிக்காத பக்கங்கள்' இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள்."
"சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், சில நேரங்களில், மொழி சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அந்ஞானி."
"பாட்டுக்குப் பெயர் வைப்பது இசையா, மொழியா? பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசை, அதை மறுக்க முடியாது. இசையும் மொழியும் பரஸ்பரம் செய்து கொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.