சினிமா செய்திகள்

ஓப்பன்ஹெய்மர்

null

ஓப்பன்ஹெய்மரில் இடம்பெற்ற பகவத் கீதை வரிகள்.. அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை?

Published On 2023-07-25 05:30 GMT   |   Update On 2023-07-25 05:30 GMT
  • இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஓப்பன்ஹெய்மர்'.
  • இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.30 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

'அணுகுண்டின் தந்தை' என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 'ஓப்பன்ஹெய்மர்'. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் இந்தியாவில் ரூ.30 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படத்தில் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் 'உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்' என்ற பகவத் கீதை வரிகள் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் இந்தியாவிற்கு ஏற்றபடி சென்சார் செய்யப்பட்ட நிலையில் இப்படியான காட்சிகளை ஏன் நீக்கவில்லை என்று தணிக்கைக் குழுவிற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க தணிக்கை குழுவிற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும்,  இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News