இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும் - நடிகர் பார்த்திபன்
- இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கியுள்ள செம்பி திரைப்படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடித்திருக்கின்றனர்.
செம்பி
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 'செம்பி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'செம்பி' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "செம்பி! செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல,'செம்பி' முழுக்க பிரபு சாலமன் அவர்களின் பேராண்மையை ரசித்தேன்.
செம்பி
பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடி கனெக்ட் செய்யும் கதைக்களமும் ஒரு குற்றத்திற்கு உரிய தீர்ப்பையும் இப்படிக் கூட செயல்படுத்த முடியும் என பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார். ஒளிப்பதிவும் இசைநுட்பமும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு சமமாக் வென்றிருக்கிறது. இவ்வளவு விரைவில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் குற்றங்களே குறைந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
செம்பி!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 29, 2022
செல்ஃபி எடுத்து தன்னைத்தானே ரசித்துக் கொள்வதைப் போல,'செம்பி' முழுக்க
பிரபு சாலமன் அவர்களின் பேராண்மையை ரசித்தேன். பெரும் தைரியத்துடன் கதைக்கருவை மட்டுமே நம்பி கோவை சரளா அவர்களையும், ஒரு சிறு பெண்ணையும் மையமாக்கி அதையே மைனாவாக்கி (அதேயளவு அழகுணர்ச்சியும், அதிரடிcontinue pic.twitter.com/UF5RcZHk52